மீனம் ராசி அன்பர்களே..!! இன்று மனதில் இனம் புரியாத குழப்பம் கொஞ்சம் வரலாம். நலம் விரும்புவோரின் ஆலோசனை நல்வழி கொடுக்கும். தொழில் வியாபாரம் சராசரி அளவில் இயங்கும். தவிர்க்க இயலாத செலவில் சிக்கனத்தை பின்பற்றுவீர்கள். நீண்ட தூர வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது. இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல்கள் கொஞ்சம் ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். எதுவுமே மாலை நேரத்திற்குப் பிறகு சரியாகும், கவலை வேண்டாம். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனமாக இருங்கள். உத்தியோகத்தில் சரியாக முடிவெடுக்க வேண்டும் என்ற கவலை இருக்கும்.
எதை பற்றியும் நீங்கள் எப்பொழுதும் கவலை கொள்ள வேண்டாம். காரியத்தை நீங்கள் செய்வதற்கு மட்டுமே முயற்சி செய்யுங்கள், இறைவன் அருளால் உங்களுக்கு எப்போதுமே நல்லதாகவே நடக்கும். சக ஊழியரிடம் கொஞ்சம் கவனமாக பேசுங்கள். யாரிடமும் கோபபடாமல் வாக்குவாதத்தை கை விட்டாலே போதும். உங்களுடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். அது உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காகத்திற்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பை ஏற்படுத்தும்.
அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை.