மீனம் ராசி அன்பர்களே..!! இன்று செயல்களில் நேர்த்தியும் திறமையும் மிகுந்து காணப்படும். தொழில் வியாபாரத்தில் உற்சாகம் பெறுவீர்கள். நிலுவையில் இருந்த பணம் ஓரளவு வசூலாகும். வாக்குவாதத்தில் மட்டும் இன்று ஈடுபடவேண்டாம். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்புகள் விலகி செல்லும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் அனைத்து பிரச்சினையும் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கிய பணிகளை மேற்கொள்வீர்கள்.
நண்பர்கள் உறவினர்களிடம் இருந்துவந்த பிரச்சினைகள் அகலும். குடும்பத்தில் அமைதி நிலவ குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வீர்கள். உடல் சோர்வு கொஞ்சம் இருக்கும் கவலை வேண்டாம். கூடுமானவரை வெளியூர் பயணத்தின் பொழுது போது அலைச்சலை மட்டும் தவிர்த்துவிடுங்கள். யாருக்கும் நீங்கள் பொருட்களை இரவலாக கொடுக்காதீர்கள், இந்த விஷயத்தில் ரொம்ப கவனமாக இருங்கள். யாரிடமும் இன்று பணத் தேவைக்காக கடன்களோ அல்லது நீங்கள் கடன்களோ கொடுக்காதீர்கள் இதை மட்டும் நீங்கள் கடைபிடித்தால் போதும். வாகனத்தில் செல்லும் பொழுது நீங்கள் கவனமாக தான் செல்ல வேண்டும்.
இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று லட்சுமி வழிபட்டையும் 7 நபர்களுக்கு தயிர்சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கு அதிஷ்டமான திசை: தெற்க்கு
அதிஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை மற்றும் மஞ்சள்