மீன ராசி அன்பர்கள்,
இன்று நண்பரிடம் கேட்ட உதவி உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். தொழில் வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பணவரவும் நன்மையைக் கொடுக்கும். குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். நித்திரையில் இனிய கனவுகள் வரும். எதையும் சமாளிக்கும் திறமை ஏற்படும். அடுத்தவர்களின் செயல்கள் உங்களுக்கு கோபத்தை கொஞ்சம் ஏற்படுத்தலாம் எனவே நிதானமாக செயல்படுவது ரொம்ப நல்லது.
சொந்த காரியங்களில் தாமதம் ஏற்படலாம். சின்ன சின்ன விஷயங்களால் மன நிறைவு அடைவீர்கள். இன்று எதிர்பார்த்து எதிர்பாலினத்தாரிடம் பழகும் பொழுது கவனமாக பழகுங்கள். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். எதைப்பற்றியும் கவலைப்படாமல் எடுத்த காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். இன்று உடல் நிலையை பொருத்தவரை எந்த பிரச்சினையும் இல்லை. வாகனம் வாங்க கூடிய யோகம் இன்று இருக்கும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் நீலநிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் ஒரு சேர வணங்குங்கள், உங்களுடைய காரியங்கள் அனைத்துமே ரொம்ப நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்; 4 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் மஞ்சள் நிறம்