மீனம் ராசி அன்பர்கள்…
இன்று சிலர் சொல்லும் அறிவுரை உங்களுக்கு சங்கடத்தை உருவாக்கும். மனசாட்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள் தொழில் வியாபார வளர்ச்சிக்கு அதிகமாக பணிபுரிவது அவசியம். வரவை விட செலவு அதிகரிக்கும், வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது. இன்று உறவினர் நண்பர்களுடன் இருந்த மன வருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும்.
எதிர்பார்த்த சரக்குகள் வருவதில் கொஞ்சம் தாமதம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பதை தவிர்ப்பது நல்லது. மேல் அதிகாரிகள் மூலம் நன்மை உண்டாகும் தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடுகள் ஏற்பட்டு பின்னர் விலகிச்செல்லும். வியாபாரம் தொடர்பான பிரச்சனையை கையாளும் பொழுது கவனமாக கையாளுங்கள்.
இன்று முக்கிய முடிவுகளை நீங்கள் எடுக்கும் பொழுது கொஞ்சம் ஆலோசனை செய்தும் தீவிரமாக சிந்தனை செய்தும் எடுப்பது மிகவும் நல்லது. இன்று மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் விலகி செல்லும் நல்ல முன்னேற்றம் பெறுவார்கள், விளையாட்டு துறையிலும் வெற்றி பெறுவார்கள்.
இன்று முக்கியமான முடிவுகளை நீங்கள் எடுக்கும் பொழுது காவி நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் காவி நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்
அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : காவி மற்றும் நீல நிறம்