மீனம் ராசி அன்பர்களே..! உங்களுடைய பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவிகளை செய்வார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும், எதிர்பார்த்த லாபம் வரும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை சிரமமின்றி செய்து முடிப்பார்கள். பயணங்கள் செல்வதாக இருந்தால் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் சின்ன சின்ன சிக்கல்கள் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருந்தாலும் சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்வதும், சரியான நேரத்திற்கு தூங்க செல்வதும் உடல் ஆரோக்கியத்தை நல்லபடியாக மேம்படுத்தும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டால் மிகச் சிறப்பாக இருக்கும்.பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிஷ்ட எண்கள் : 1 மற்றும் 3
அதிஷ்ட நிறம்: பச்சை மற்றும் வெள்ளை