Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…குழப்பம் அதிகரிக்கும்…சிந்தனை மேலோங்கும்…!

 

மீனம் ராசி அன்பர்களே..!  இன்று மனதில் குழப்பம் கொஞ்சம் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உருவாக்க செலவுகளை சரி செய்ய தகுந்த பண வரவு கிடைக்கும். தாய்வழி உறவினர் இடம் கேட்டு உதவி வந்து சேரும். வியாபார ரீதியான பயணம்  வெற்றியை கொடுக்கும். தங்களுடன் அன்பாக பேசி வந்தவர்கள் கூட பகைமை பாராட்டக் கூடும். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருந்தாலும் முடிவில் லாபம் உங்கள்  பக்கம்தான்.

எதிர்பார்த்த கடன் வசதிகள் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். தொழில் வியாபாரத்திற்கு புதிதாக இடம் வாங்கலாம் என்ற சிந்தனை மேலோங்கும். உச்சத்தில் இருப்பவர்கள் உழைப்புக்கு ஏற்ற பலனை அடையக்கூடும். நிலுவையில் உள்ள பணம் வசூலாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமைப்பதற்கான சூழலும் உண்டு.

காதலர்களுக்கு இன்று முன்னேற்றமான நாளாக இருக்கும். தயவுசெய்து வாக்கு வாதத்தை மட்டும் தவிர்த்து விடுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கும். இளம்பச்சை உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: நீலம் பச்சை மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |