மீனம் ராசி அன்பர்களே..! எல்லா நலமும் வளமும் பெற்று இனிய நாளாக இன்று நாளை அமைத்துக் கொள்வீர்கள். தன வரவு கூடும் பயணங்கள் செல்லும் பொழுது மனம் மகிழ்ச்சி கொள்ளும். ஆனால் பயணங்களின் போது மட்டும் எச்சரிக்கை எப்போதும் இருக்கட்டும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் நடக்கும். மற்றவர்களின் நலனுக்காக தன் நலனை பாராமல் உழைப்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்தபடி செயல்கள் முடிவதில் சில சிக்கல்கள் இருக்கும், எதைப்பற்றியும் கவலைப்படாமல் காரியத்தை மட்டும் செய்யுங்கள்.
உடல் ஆரோக்கியம் திடீரென்று பாதிக்கப்படலாம், வயிற்று உப்பசம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். வாக்குவாதம் உண்டாகலாம். எந்த ஒரு விஷயத்திலும் தடங்கல்கள் அவ்வப்போது வந்து செல்லும். மனம் தளராமல் காரியங்களை மேற்கொள்ளுங்கள். உறவினர்களின் ஒத்துழைப்பும், நண்பர்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். மற்றவர்களை பற்றி தயவு செய்து கவலை கொண்டிருக்க வேண்டாம்.
உங்களுடைய ரகசியங்களை நீங்கள் தயவுசெய்து பாதுகாத்திட வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று குருபகவான் வழிபாட்டையும், சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்களை மேற்கொள்ளுங்கள். உங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்.