மீன ராசி அன்பர்களே…! இன்று வெளிநாட்டு தகவலால் வியப்படையும் நாளாக இருக்கும். முக்கியமான காரியத்திற்கு முடிவு எடுப்பீர்கள். மனக்குழப்பம் விலகிச்செல்லும். வருமானம் மேலோங்கும். பஞ்சாயத்துக்கள் சாதகமாக நடந்து முடியும். எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாத குழப்பம் இருந்து கொண்டே தான் இருக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். நிர்வாக திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். இன்று கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும்.
அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றமான சூழ்நிலையை அமைத்துக் கொள்வீர்கள். அதனால் மதிப்பு உங்களுக்கு கூடும். எதிர்ப்புகளை சமாளித்து முன்னேற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். ஆனால் புதிய முயற்சிகளில் மட்டும் இப்போதைக்கு வேண்டாம் தள்ளிப்போடுங்கள். பெரிய தொகையை ஈடுபடுத்தி எந்தவொரு காரியத்தையும் செய்ய வேண்டாம். நிதானம் வேண்டும். வாகனத்தில் செல்லும் போது பொறுமை காக்க வேண்டும்.
காதலர்களுக்கு இன்று இனிமையான நாளாக இருந்தாலும் கூடுமானவரை கவனமாக இருங்கள். சகோதர வழியில் ஒத்துழைப்பும் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்.