மீன ராசி அன்பர்களே…! இன்று திட்டமிட்டு செய்தாலும் காரியங்களை சின்ன சின்ன தடங்கல்கள் இருக்கும். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான விஷயங்களில் தாமதமாகவே நடக்கும். புதிய நட்புகள் கிடைக்கும். மனம் கொஞ்சம் தெளிவாக தான் காணப்படும். எதிர்பார்ப்புகள் ஓரளவு பூர்த்தியாகும். சிறு வியாபாரிகளுக்கு விற்பனையும் வருமானமும் அதிகரித்துக் காணப்படும்.
உங்களது முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைகள் அகலும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உடன் பணிபுரிபவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட லாம் அதை மட்டும் நீங்கள் கவனமாக கையாளுங்கள். சாதுரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றியும் ஏற்படும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரலாம். உங்களுடைய அருமையைப் பற்றி தெரிந்து கொண்டவர்கள் உங்களிடம் இன்று சரண் அடைவார்கள்.
காதலர்களுக்கும் இன்றி இனிமையான நாளாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் இளம்நீல நிறம்.