மீன ராசி அன்பர்களே…! கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் மதிப்பார்கள், இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். நேர்மறை எண்ணம் பிறக்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். முகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதிய பாதை புலப்படும் நாளாக இன்று இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த அனைத்து விதமான பிரச்சினைகளும் இன்று சரியாகும்.
பிள்ளைகள் விரும்பும் பொருட்களை வாங்கிக் கொடுத்து அவர்களை மகிழ்ச்சி அடைய செய்வீர்கள். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் இருக்கும். வீடு வாங்குவது பற்றிய சிந்தனை மேலோங்கும். எதையும் இன்று மிகச் சிறப்பாகச் செய்விர்கள். காதலர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாக இருக்கும். புதியதாக காதலில் வயப்படக்கூடிய சூழல் இயக்கும். கொடுக்கல் வாங்கல்கள் மிகச்சிறப்பாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகி ஆனந்தத்தைக் கொடுக்கும்.
உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சினையும் இல்லாமல் மிகவும் சிறப்பாகவே இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை உண்டாக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.