மீன ராசி அன்பர்களே…! இன்று மதிப்பும், மரியாதையும் கூடும். புதிய காரியங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவேண்டும் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். விபத்து ஏற்படாது இருக்க பயணத்தின்போது கவனம் வேண்டும். மன அமைதி பெற தியானம் கண்டிப்பாக செய்யுங்கள். மாலை நேரங்களில் நடைப்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடுதல் நல்லது. வேலை நிமித்தமாக வெளியூர் செல்ல நேரலாம்.
நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மறைமுக எதிர்ப்புகளும் அதிகரிக்கும். மன நோய் ஏற்படலாம். அதனால் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருங்கள். தொழில் வியாபாரத்தில் நிதானம் வேண்டும். தயவு செய்து மற்றவரிடம் பணம் விஷயமாக எதையும் கலந்து கொள்ள வேண்டாம். பழைய பாக்கிகள் வசூலாவதில் சின்ன சின்ன சண்டைகள் இருக்கும். பல பிரச்சினைகள் ஓரளவு தான் இருருக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் வேலை பளு அதிகரிக்கும்.
தகராறு வம்பு வழக்குகளில் தயவுசெய்து தலையிடாமல் இருப்பதால் ஓரளவே சாதகமான போக்கு காணப்படும். இன்று இறை வழிபாட்டுடன் காரியங்களை தொடருங்கள் யாருக்கும் தயவுசெய்து ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள் வாக்குறுதிகளையும் கொடுக்காதீர்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 7
அதிஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.