மீன ராசி அன்பர்களே…! இன்று சொந்த நலனில் அக்கறை வேண்டும். தொழில் வியாபாரம் சீராக அதிகமாக உழைக்கவேண்டும். ஒவ்வாத உணவுகளை தயவு செய்து உண்ண வேண்டாம். அரசு உதவி கிடைப்பதில் தாமதம் இருக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு மற்றவர்கள் பொறாமைப்பட கூடும். கடன் பிரச்சினை பொறுத்தவரை ஓரளவு சீராக இருக்கும். வெகுநாட்களாக எதிர்பார்த்த தகவல் நல்ல விதத்தில் வந்து சேரும்.
வருமானம் தாங்கள் எதிர்பார்த்ததை விட கூடுதலாகவே இன்பம் கிடைக்கும். உடலில் ஏதேனும் உபாதை என்றால் உடனே மருத்துவரை நீங்கள் அணுக வேண்டும். பெரிய செலவினங்களை தயவு செய்து நீங்கள் குறைத்துக் கொள்ளலாம். எதிலும் கொஞ்சம் தடை இருந்தாலும் வந்து சேரும். எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை மட்டும் கடைபிடியுங்கள். இறை வழிபாட்டுடன் காரியங்களை எதிர்கொள்ளுங்கள். சாதகமான பேச்சு உங்களுக்கு சில நேரங்களில் கை கொடுக்கும்.
சில நேரங்களில் கோபத்தை தூண்டக்கூடிய அளவிலும் அமையும்.. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.