Categories
ஆன்மிகம் மாவட்ட செய்திகள் ஜோதிடம்

மீன ராசிக்கு…நம்பிக்கையோடு செயல்படுவீர்கள்…பிரச்சனைகள் நீங்கும்…!

மீன ராசி அன்பர்களே…!   இன்று உங்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கையோடு நீங்கள் பணிபுரிவீர்கள். குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். தேக ஆரோக்யத்தில் அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்பட்டாலும் மனதில் மட்டும் குழப்பம் இருக்கும். மனக்கவலை இருந்து கொண்டே இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அதே நேரத்தில் வாக்குவாதமும் கொஞ்சம் ஏற்படும்.

பிள்ளைகள் மூலம் செலவுகள் இருக்கும். அவரது முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பீர்கள். பயணங்கள் செல்லலாம் உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். விண்செலவுகளை கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். தேவையில்லாத விஷயங்களில் ஏதும் செய்ய வேண்டாம். புதிய முயற்சிகளை இப்போதைக்கு எதுவும் செய்ய வேண்டாம் கொஞ்சம் தள்ளிப் போடுங்கள்.

காதலர்கள் இன்று  பொறுமை காக்க வேண்டும் நிதானமாகப் பேச வேண்டும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ள கருநீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. அது  உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்கள்: 7 மற்றும் 8

அதிஷ்ட நிறம்: கரு நீலம் மற்றும் இளம் பச்சை நிறம்.

Categories

Tech |