மீன ராசி அன்பர்களே…! வரவு இருமடங்காக இருக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். தொழில் மாற்றம் செய்யலாமா என்று யோசனை செய்வீர்கள். குடும்பத்தினர் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். துணிச்சலாக சில முயற்சிகளை மேற்கொண்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். மேல் அதிகாரிகளால் நன்மை ஏற்படும்.
காரியங்களை துணிச்சலாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். தன வரவு தாராளமாக இருக்கும். கொடுக்கல் வாங்கலும் சீராகவே இருக்கும். புதிய முயற்சிகளில் கூட நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஏழை மாணவர்களுக்கு உதவி செய்யக் கூடிய சூழல் இருக்கும். அதாவது மற்றவர்களுக்கும் நீங்கள் உதவி செய்வீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரித்தாலும் அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு நல்லதே நடக்கும். காதலர்களுக்கு பொன்னான நாளாக அமையும்.
அதுமட்டுமில்லாமல் திருமணத்திற்காக முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் மிக சிறப்பாக இருக்கும். அதுபோலவே திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல வரன் அமையும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 1
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்.