Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு…அலைச்சல் உண்டாகும்…உழைப்பு அதிகரிக்கும்…!

மீன ராசி அன்பர்களே…!    இன்று உங்களிடம் பொறுப்புகள் தேடிவரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு பற்றி தகவல் வந்து சேரும். சுப விரயங்கள் உண்டாகும். நண்பர்களால் சில பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். அதை மட்டும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள். நினைத்தபடி போதுமான அளவு இன்று தன லாபங்களும் இருக்கும். கொஞ்சம் கடுமையாகத்தான் உழைக்க வேண்டியிருக்கும். கண்ணில் உபாதைகள் கொஞ்சம் ஏற்படலாம்.

உடல் ஆரோக்கியத்தில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ள வேண்டும். முட்டுக்கட்டைகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். அது கொஞ்சம் அலைச்சலை கொடுக்கும். பணம் வரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் வீண் வாக்குவாதங்களில் கொஞ்சம் ஈடுபடலாம்.  கணவன் மனைவிக்கு இடையே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது ரொம்ப நல்லது. நிதானத்தைக் கடைப்பிடித்தால் எப்போதுமே நீங்கள் வெற்றி பெறலாம்.

அதே போல மற்றவர்கள் கூறுவதை அலட்சியம் காட்டாமல் அதில் நல்லது கெட்டதை ஆராய்ந்து பார்த்து அதற்கு ஏற்றார்போல் செயல்படுங்கள். மிக முக்கியமாக பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல்  குருபகவான் வழிபாட்டையும், சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு

அதிஷ்ட எண்கள்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |