மீன ராசி அன்பர்களே…! இன்ற உணர்ச்சிவசப்படும் நிலை ஏற்படலாம். குடும்ப விஷயங்களை பிறரிடம் தயவுசெய்து சொல்ல வேண்டாம். கடின உழைப்பால் தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். பணத்தேவை அதிகரிக்கும். பயணத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கி அமைதி உண்டாகும். கணவர் மனைவிக்கிடையே மகிழ்ச்சி இருக்கும். பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். வாகனங்கள், சொத்துக்கள் வாங்க ஆர்வம் காட்டுவீர்கள்.
ஆனால் வாகனத்தில் செல்லும் போது ரொம்ப பெருமையாக செல்ல வேண்டும். இதை கண்டிப்பாக கடைப்பிடித்து தான் ஆகவேண்டும். பேசும்போது நிதானத்தைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். இன்று எதைப்பற்றியும் சிந்தித்துக் கொண்டிருக்காமல் காரியத்தை மட்டும் கவனமாக செய்யுங்கள். தேவையில்லாத மனக் குழப்பம் கொஞ்சம் இருக்கும். மாலை நேரங்களில் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். இசைப் பாடலை ரசித்து மகிழுங்கள் மனம் ஓரளவு நிம்மதியாக காணப்படும்.
மனம் தெளிவு பெற்று விட்டால் அனைத்தையும் நீங்கள் மிக சிறப்பாக செய்து முடிப்பீர்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கருநீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. கருநீலம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம் மற்றும் மஞ்சள் நிறம்.