Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு…பொறுப்புகள் கைகூடிவரும்…மனதிருப்தி உண்டாகும்…!

மீன ராசி அன்பர்களே…!    எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். வியாபாரத்தில் இருந்த இழுபறியான நிலை நீங்கி சாதகமான பலனை உண்டாக்கும். இன்று காரியங்கள் செய்து முடிப்பதில் மெத்தனப் போக்கு காணப்படும். எதிர்பாராத திருப்பம் உண்டாகும். முன்பு கிடைத்த அனுபவம் இப்போது கைகொடுக்கும். பொறுப்புகள் கைகூடிவரும்.

எதிலும் எச்சரிக்கையாக பேசுவது மட்டும் நல்லது. சுயதொழில் செய்பவர்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்தால் நல்ல முன்னேற்றமான பலனை அடையலாம். தயவுசெய்து புதிதாக கடன்கள் மட்டும் வாங்க வேண்டாம். கொஞ்சம் பொறுமையாக இருங்கள் உங்களுக்கான நேரம் வரும் பொழுது அனைத்து விஷயங்களும் சரியாகும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாகவே இருக்கும். எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

வசீகரமான பேச்சால் முன்னேற்றமான சூழ்நிலை  உருவாக்கிக் கொள்வீர்கள். இன்று  முக்கியமான பணியை மேற்கொள்ள  வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே  கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிகச் சரியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |