மீன ராசி அன்பர்களே…! வழக்கத்திற்கு மாறான பணி உங்களுக்கு தொந்தரவைக் கொடுக்கும். செயல் நிறைவேற கூடுதலாக கவனம் வேண்டும். தொழில் வியாபாரத்தில் அரசின் சட்ட திட்டங்களை தவறாமல் பின்பற்ற வேண்டும். செலவு தேவையற்ற கடன் பெறுவதை தவிர்க்க அதிக விலையுள்ள பொருட்களை தயவுசெய்து இரவல் கொடுக்க வேண்டாம். உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டியிருக்கும்.
சிலருக்கு அலர்ஜி சம்பந்தமான உபாதைகள் வந்து மறையும். வருமானத்திற்கு எந்த குறையும் இல்லை. பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியம் நல்லபடியாக கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். தந்தையுடன் அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் வர வேண்டிய லாபம் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும்.
முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் தராமல் போகலாம். அதற்காக நீங்கள் கவலைப்படாதீர்கள். பொறுமை காக்க வேண்டும். காதலர்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்வது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்.