மீன ராசி அன்பர்களே…! மனதில் புதிய நம்பிக்கையை உருவாக்க உங்களுடைய செயல்களில் நேர்த்தியும் வசீகரமும் நிறைந்து காணப்படும். தொழில் வியாபாரம் செழிக்க அனுகூல சூழ்நிலை உருவாகும். பண பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு பொறுப்பான பதவிகள் கிடைக்க நல்ல யோகமான நாளாக இன்று இருக்கும். குடும்பத்தில் பிரச்சினைகள் தலைதூக்கும். மிகவும் கவனமாகக் கையாண்டால் அது தீரும்.
கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். பிள்ளைகளுடைய கேட்காமல் தன்னிச்சையாக சில முடிவுகளை எடுக்கலாம். உறவினர்கள் நண்பர்களிடம் கவனமாக பழகவேண்டும். அனுபவபூர்வமான அறிவைக் கொண்டு எதையும் சாதிப்பீர்கள். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். அதே போல யாரிடமும் பேசும் பொழுதும் கருத்து வேறுபாடும் இல்லாமல் பேசுங்கள் அது போதும். இன்று மனைவியிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.
கூடுமானவரை இன்று எதைப்பற்றியும் சிந்தித்துக் கொண்டிருக்காமல் காரியத்தை மட்டும் கவனமாக செய்யுங்கள். அதுபோலவே காதலர்களுக்கு இந்த நாள் சிறப்பான நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.