Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு…லாபம் உண்டாகும்…செலவு அதிகரிக்கும்…!

மீன ராசி அன்பர்களே…!    இன்று அதிகாரிகளால் ஆதாயம்  கிடைக்கும் நாளாக இருக்கும். பூர்விக சொத்து விற்பனையால் லாபம் உண்டாகும். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமை அடைவீர்கள். பிரச்சினைகள் படிப்படியாக சீராகும். எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். அதேபோல எந்த ஒரு காரியத்திலும் அலட்சியம் காட்ட வேண்டாம். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. வேலை தொடர்பாக அலைய வேண்டியிருக்கும். அலைச்சல் இருந்தாலும் நல்ல விஷயங்கள்  உங்களுக்கு நடக்கும்.

பயணங்கள் செல்வதாக இருந்தால் உணவுகள் மீது கவனமாக இருங்கள். அதுபோலவே எப்போதும் மற்றவர்கள் பார்வையில் படும் படி பணத்தை மட்டும் என்ன வேண்டாம். எந்த விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். தூரதேசத்திலிருந்து நல்ல தகவல்கள் வரும். வசீகரமான தோற்றத்தால்  அனைவரையும் நீங்கள் கவர்வீர்கள். இறைவழிபாட்டுடன் காரியங்களில் எதிர்கொள்ளுங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். இறைவனுக்காக சிறு தொகையை நீங்கள் செலவிட நேரிடும். செலவை கட்டுப்படுத்துவதற்கு எப்போதுமே முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

கணவன் மனைவியைப் பொறுத்தவரை எந்த விதத்திலும் பிரச்சினை இன்றி சுமுகமாக இருக்கும். ஆனால் மனைவி சொல்வதை தயவு செய்து ஏற்றுக் கொண்டு அதற்கு ஏற்றார்போல் பதில் கொடுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரோம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |