மீனம் ராசி அன்பர்களே…! இன்று கொஞ்சம் சுமாரான நாளாக இருக்கும். அனைத்து விஷயங்களிலும் உங்களின் உழைப்பு அதிகமாக தான் இருக்கும். கடின உழைப்பால் ஓரளவு தொழில் விருத்தி கூட நீங்கள் காணலாம். கௌரவக் குறைவு ஏற்படாத வண்ணம் நீங்கள் பேசவேண்டும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். உங்களை எதிர்த்து செயல்பட்டவர்கள் அடங்கி விடுவார்கள். பணவரவு ஓரளவு எதிர்பார்த்தபடி தான் இருக்கும். எந்தவித மாற்றங்களிலும் நீங்கள் கொஞ்சம் கவனமாக இருங்கள். எதிர் பாலினரின் நட்பும் அதனால் மகிழ்ச்சி இருக்கும்.
சில நேரங்களில் மகிழ்ச்சி உச்சத்தைத் தொடும். உடன்பிறப்புகளிடம் ரொம்ப அமைதியாக நடந்து கொள்ளுங்கள். தந்தையிடம் எந்தவித வாக்குவாதமும் செய்யாதீர்கள். வீண் செலவு அதிகமாக இருப்பதால் செலவை கட்டுப்படுத்துவதற்கு மட்டும் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். அதாவது குடும்பத்திற்கு வேண்டிய பொருட்களை மட்டும் வாங்குங்கள். இப்போதைக்கு எந்த வித முதலீடுகள் செய்ய வேண்டாம். புதிய கடன்களும் இப்போதைக்கு ஏதும் வாங்க வேண்டாம்.உடல் நலத்தில் அக்கறை தேவை. அதாவது வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் இருக்கும்.
செரிமான கோளாறு போன்ற பிரச்சினைகள் இருக்கும். காதலில் பொறுமை காக்க வேண்டும். பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். சிலருக்கு புதிதாக காதலில் வயப்படக்கூடிய சூழலும் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சித்தர்கள் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிஷ்ட எண்கள்: 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.