மீன ராசி அன்பர்களே…! இன்று பாக்கிய விருத்தி ஏற்படும் நாளாக இருக்கும். சாதுரியமான பேச்சால் அனைவரையும் கவர்ந்து விடுப்வீர்கள். செல்வ நிலை சீராக உயரும். அரசால் ஆதாயம் ஏற்படும். பல வகைகளில் மனைவி உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். குறிக்கோளற்ற பயணங்கள் அதன் மூலம் அலைச்சலும் ஏற்படும். உடல்நலக் கேடு போன்றவை ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் எப்போதுமே கவனம் கொள்ளுங்கள். சரியான உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
கூடுமானவரை உஷ்ணம் சம்பந்தமான பிரச்சினை இருந்து விடுபடலாம். அதற்கு ஏற்றார்போல் உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். திட்டமிட்டு எதையும் செய்யுங்கள் மனதில் பின் கவலை உண்டாகக் கூடும். அடுத்தவரை நம்பி எதையும் ஒப்படைப்பதை தடுக்கவேண்டும். சுபசெலவுகள் இருக்கத்தான் செய்யும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு செய்யும் காரியங்கள் நல்ல பலனை கொடுப்பதாக இருக்கும். அதாவது எதையுமே யோசித்து செய்யுங்கள் முடிந்தால் உங்களுடைய பெரியோர்களிடம் ஆலோசனை கேளுங்கள்.
புதிய முயற்சிகளில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள் யாரிடம் பேசும்பொழுதும் நிதானத்தை கடைபிடியுங்கள். உங்களுக்கு அம்மன் அருளால் எல்லா விஷயங்களுமே சரியாகவே நடக்கும். ஆனால் காதலர்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்து தான் ஆகவேண்டும். பொதுநல விஷயங்களில் பங்கேற்கும் போது கொஞ்சம் கவனமாக இருங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை கண்டிப்பாக மேற்கொண்டால் அம்மன் வழிபாடு உங்களுக்கு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்.