Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு…ஆன்மிகத்தில் நாட்டம் செல்லும்…கடன்கள் செல்லும்…!

மீன ராசி அன்பர்களே…!  புகழ் மிக்கவர்கள் சந்திப்பு கிட்டும் நாளாக இன்றைய நாள்  இருக்கும். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் உருவாகும். உத்தியோகத்தில் உங்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பு கூடும். இன்று தொழில் வியாபாரத்தில் வேகமான போக்கு காணப்படும். சரக்குகளை அனுப்பும் பொழுதும், பாதுகாத்து வைக்கும் போதும் எச்சரிக்கை என்பது கண்டிப்பாக வேண்டும். இதுவரை இருந்த கடன்கள் ஓரளவு பைசலாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்ல வேண்டும். செய்யும் வேலை பற்றி மனதில் திருப்திகரமான எண்ணம் உருவாகும். அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மையை கொடுக்கும். இன்று பொறுமை என்பது கண்டிப்பாக வேண்டும். ஆன்மிகத்தில் நாட்டம் செல்லும். தேவைகளை பூர்த்திசெய்வதற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். இன்று அன்றாடப் பணிகளில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். மாலை நேரங்களில் தியானம் போன்றவற்றில் ஈடுபடுங்கள்.

நடைபயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுங்கள் உடல் ஆரோக்கியத்தை காத்திடுங்கள். இன்று காதலர்களுக்கும் ஓரளவு இனிமை காணும் நாளாகவே இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |