Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு…ஆர்வம் அதிகரிக்கும்…நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியளிக்கும்…!

மீன ராசி அன்பர்களே…!    இன்று பணவரவு திருப்தி தரும் நாளாக இருக்கும். தொழில் முன்னேற்றத்திற்கு உதவியவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வீட்டை விரிவுபடுத்த கூடிய எண்ணங்கள் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஆர்வம் செல்லும். ஆடம்பர பொருட்களின் சேர்க்கை உண்டாகும். வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் சற்று தாமதமாகவே நடக்கும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நன்மையை கொடுக்கும். திருமண முயற்சிகள் ஓரளவு கைகூடும். பணம் வரவு தடை நீங்கி கையில் வந்து சேரும்.

குழந்தைகள் பற்றிய கவலை இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்துவந்த பிரச்சினைகள் சரியாகும். தந்தை வழியில் இருந்துவந்த பிரச்சனைகளும் சரியாகும். உடல் ஆரோக்கியம் சீராகவே இருக்கும். அக்கம் பக்கத்தில் மட்டும் பேசும் பொழுது நிதானமாகப் பேசுங்கள். எல்லோரிடமும் அன்பாக நடப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். காதலர்கள் இன்று கண்டிப்பாக பொறுமையுடன் நடந்து கொள்ளுங்கள்.

பேச்சில் நிதானத்தை கடைபிடியுங்கள். முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள்காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |