மீன ராசி அன்பர்களே…! இன்று உங்களுடைய செயல்கள் நிறைவேறுவதற்கு கால தாமதம் ஆகலாம். சிறிய பதுமை போல தோன்றும். தொழில் வியாபாரம் சிறக்க கூடுதலாக பணிபுரிவது அவசியம். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். பெண்கள் நகைகளை இரவல் கொடுக்க வேண்டாம். புதிய முயற்சிகள் தள்ளிப் போடுங்கள். காரியத்தில் தடை தாமதம் கொஞ்சம் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதே போல இரு தரப்பு வாதங்களையும் கேட்டு அதன் பிறகே நியாயத்தை சொல்வது நல்லது. பஞ்சாயத்துக்களில் கூடுமானவரை கலந்து கொள்ள வேண்டாம்.
அப்படி கலந்து கொள்ளக் கூடிய சூழலில் இருந்தால் இதனை நீங்கள் செய்யுங்கள். எதிர்பார்ப்புகள் ஓரளவு பூர்த்தியாகும். எதிர்ப்புகள் நீங்கும். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் சீராகவே இருக்கும். பணம் வரவு எதிர்பார்த்ததைவிட அதிகரிப்பது மனமகிழ்வை கொடுக்கும். மக்களின் ஆதரவைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. எந்த ஒரு விஷயத்திலும் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி சுமை கொஞ்சம் இருக்கும்.
மாலை நேரங்களில் எப்பொழுதும் போலவே நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். மனமும் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். உடலும் ஆரோக்கியமாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.