Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு…மனதில் மகிழ்ச்சி உண்டாகும்…ஆதரவு கிடைக்கும்…!

மீன ராசி அன்பர்களே…!   இன்று உறவினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். பணிகளை புதிய யுத்திகளால் நிறைவேற்றி விடுவீர்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சியில் புதிய பரிமாணங்களையும், பணவரவு பெறுவீர்கள். உபயோக பொருட்களையும் வாங்குவீர்கள். இன்று பதவி மாற்றம், இடமாற்றம், தொழில் மாற்றம் போன்றவை உண்டாகலாம். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

தூக்கம் வராமல் தவித்த இரவுகள் மாறி நிம்மதியான தூக்கம் வரும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் சிறு குழப்பங்கள் வந்து போகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களையும் வாங்குவீர்கள். பணம் உங்கள் கையில் புரளும் நாளாக இந்நாள் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று மாலை நேரத்தில் இசைப் பாடலை ரசியுங்கள், நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள் மனம்  அமைதியாகவே காணப்படும்.

காதலர்களுக்கும் இனிமையான நாளாக இருக்கும். திருமண முயற்சிகளை ஏற்பாடு செய்யுங்கள் முன்னேற்றமே நடக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யும் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு

அதிஷ்ட எண்கள்: 5 மற்றும் 6

அதிஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |