மீன ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் எந்த ஒரு விஷயத்தையும் செய்வதாக இருந்தாலும் நேர்மையாக நடக்க வேண்டியிருக்கும். கோபத்தால் குழப்பங்கள் ஏற்படலாம். மனைவியின் செயலால் உறவுகள் பகையாக கூடும். அதிகாரிகளிடம் பணிவாக நடத்தல் அவசியம். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் பொறுமையாகத்தான் செயல்பட வேண்டும். உயர் பதவிகளில் சில முன்னேற்றங்கள் ஏற்படும்.அதிக முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். உடல் சோர்வு ஏற்படும்.
சக ஊழியருடன் சின்னச்சின்ன கருத்து வேற்றுமை வரலாம் எதிலும் கருத்து சொல்வதற்கு முன் யோசித்து சொல்வது சிறப்பு. குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். சகோதர வகையில் சில பிரச்சினைகள் எழக்கூடும். தந்தையாரிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள் உங்களுடைய கருத்துக்கு மாற்றுக் கருத்துக்கள் சிலர் சொல்லக்கூடும். இதனால் கோபம் கொஞ்சம் தலை தூக்கும். இன்று வாகனத்தில் செல்லும்போது கூட பொறுமையாகவே செல்லுங்கள்.
பஞ்சாயத்துக்கள் கூட செய்யாதீர்கள். இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் கொஞ்சம் புரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்தாலும் சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.