Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு…தன்னம்பிக்கை கூடும்…அந்தஸ்து உயரும்…!

மீன ராசி அன்பர்களே…!   இன்று அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறும் நாளாக இருக்கும். உங்களுடைய தன்னம்பிக்கை கூடும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். நீண்ட நாள் அல்லது நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தகவல்கள் மகிழ்ச்சி கொடுப்பதாகவே அமையும். கோபத்தை மட்டும் தயவு செய்து குறைத்துக்கொள்ளுங்கள். நண்பரிடம் பேசும் போது கோபமில்லாமல் பேசுங்கள். அடுத்தவர் செய்கை கோபத்தை தூண்டுவதாக தான் இருக்கும்.

ஆனால் நீங்கள் பொறுமையாக இருந்தாலே போதுமானதாக இருக்கும். அனைவரையும் அனுசரித்துச் சென்றால் நல்லது. பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள். இழுபறியாக இருந்த காரியங்கள் கூட இன்று சாதகமாகவே நடந்து முடியும். சமூகத்தில் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். கௌரவம் உயரும். மக்களிடம் நல்ல மதிப்பை பெறுவீர்கள். மற்றவரிடம் பேசும்போது மனசங்கடம் ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று எண்ணிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

எதிலும் அவசரம் காண்பிப்பதை மட்டும் தவிர்க்க வேண்டும். காதலர்கள் பொறுமை காக்கவேண்டும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்து ஆகவேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளமஞ்சள் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2

அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.

Categories

Tech |