Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு…தன்னம்பிக்கை கூடும்… செல்வாக்கு உயரும்…!

மீன ராசி அன்பர்களே…!    இன்று மனம் உற்சாகமாகவே காணப்படும். தொட்டது துலங்கும் நாள் ஆக இருக்கும். உள்ளத்தில் காதல் மனைவியின் உதவியைப் பெற்று மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை கூடும். செல்வம் சேரும். தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும்போது தீர ஆலோசித்த பின் முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சக தோழிகளின் கருத்துக்கு மாற்றுக் கருத்து ஏதும் சொல்லாமல் இருப்பது நன்மையை கொடுக்கும்.

குடும்ப பிரச்சினை கட்டுக்குள் அடங்கி இருக்கும். ஆனாலும் தேவையான இடங்களில் நீங்கள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. யாரையும் குறை சொல்ல வேண்டாம். மற்றவரிடம் பொறுப்புகளை ஒப்படைக்கும் பொழுது ரொம்ப கவனம் வேண்டும். எதிர்பாராத சில திருப்பங்கள் இன்று ஏற்படும். வாய்ப்புகள் புதிதாக அமையும். எந்த ஒரு வாய்ப்புகளையும் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். புதிதாக காதல் வயப்பட்ட கூடிய சூழலும் இருக்கும்.

அதேபோல காதலர்களுக்கும் இன்று அன்பான நாளாக இருக்கும். அனைத்து விஷயங்களிலும் நல்லதே நடக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |