மீன ராசி அன்பர்களே…! இன்று சிலர் உங்களை தவறான ஆலோசனைகளை சொல்வார்கள். அவப்பெயர் வராத வகையில் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். பணம் கிடைப்பதில் தாமதம் கொஞ்சம் இருக்கும். தியானம் தெய்வ வழிபாடு மன அமைதி பெற உதவும். வாகனங்களில் செல்லும் பொழுதும் எச்சரிக்கையாக தான் இருக்க வேண்டும். சரியான நேரத்திற்கு உறங்க முடியாத சூழ்நிலை இருக்கும். மிகவும் வேண்டியவர் பிரிய வேண்டியிருக்கும். மற்றவர்களுக்கு பளிச்சென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும்.
அரசியல் துறையினர் மனத்திருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலனைப் பெறுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடலாம் மனதிற்கு பிடித்தவர்களை சந்திக்க நேரிடும். அதேபோல உதவி வென்று வருபவரிடம் கொஞ்சம் கவனமாகத்தான் நடந்துகொள்ள வேண்டும். சரியான நபராக இன்று தேர்ந்தெடுத்து உதவிகளை செய்யுங்கள். தேவையில்லாத சிக்கலில் மட்டும் மாட்டிக் கொள்ள வேண்டாம். அதேபோல பிரச்சனைகளில் தலையிட்டு முழுதும் கொஞ்சம் கவனமாக இருங்கள்.
பஞ்சாயத்துகளிலும் கொஞ்சம் கவனமாக இருங்கள். கூடுமானவரை கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் ஏதும் வேண்டாம். காதலர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருந்தாலும் வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபடவேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.