மீனம் ராசி அன்பர்கள்,
இன்று பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும் நாளாக இருக்கும். நண்பர்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாக நடந்துகொள்வார்கள். தொலைபேசி வழித் தகவல் தொழிலுக்கு உதவி புரியும். எதிர்பார்த்ததை விட லாபம் இருமடங்காக இருக்கும். இன்று வர்த்தகத் திறமை அதிகரிக்கும், பணவரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். இழுபறியாக இருந்த வேலைகளை துணிச்சலாக செய்து முடிப்பீர்கள்.
மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டாகும். விளையாட்டு மற்றும் போட்டியில் சாதகமான பலனை கொடுக்கும். சக மாணவர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். குடும்ப பிரச்சனைகளில் சாதகமான முடிவு காணப்படும். இன்று அனைத்து விஷயங்களையும் நீங்கள் திறமையாக செய்து முடிப்பீர்கள். உடலில் வசீகரத் தன்மை கூடும். காதல் வயப்பட கூடிய சூழலும் இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது காவி நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். காவி நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவிலேயே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியங்களும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் காவி நிறம்