மீனம் ராசி அன்பர்களே, இன்று கோவத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள்.பிள்ளைகளின் பொறுப்புகளை உணர்ந்து கொண்டு அதிகமாக அவர்களுக்காக செயல்படுவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவரின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள்.
உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் மெத்தனமான போக்கு காணப்படும்.வாடிக்கையாளர்களிடம் கோபமான வார்த்தைகளை பேசாமல், சாந்தமாக உரையாடுவது வியாபார விருத்திக்கு சிறப்பாக இருக்கும். பண வரவு ஓரளவு இன்று சிறப்பாகத்தான் இருக்கும்.
செலவு கொஞ்சம் கூடும். குடும்பத்தில் இருப்பவர்களை மட்டும் தயவு செய்து அனுசரித்துச் செல்லுங்கள். வாழ்க்கை துணையின் உடல் நிலையில்,கொஞ்சம் அக்கறையாக இருங்கள். இன்று பொது காரியங்களில் ஈடுபடும்பொழுது ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்.
இன்று உடலில் வசீகரத் தன்மை கூடும். காதலில் பயப்படக்கூடிய சூழல் நிலவும. அது போலவே திருமண முயற்சியும் வெற்றி பெறும் முயற்சியாகவே அமையும். இன்று மாணவ செல்வங்கள் கொஞ்சம் பொறுமையாக இருந்து பாடங்களை படியுங்கள், பாடங்களில் மட்டும் கவனத்தை செலுத்துங்கள், பாடத்தை தயவுசெய்து எழுதிப் பாருங்கள்.
இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் ஊதா