மீனம் ராசி அன்பர்களே, இன்று முன்னேற்றம் காண்பதற்கு முயற்சி எடுக்கும் நாளாகவே இருக்கும். உடன்பிறப்புகள் நீங்கள் கேட்ட உதவிகளை செய்ய முன்வருவார்கள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் விரிவடையும். இன்று திடீர் கோபங்கள் ஏற்படலாம், நிதானமாக இருப்பது நல்லது. புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள்.
எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிப்போடாமல் உடனே முடிவு காண்பது நல்லது. உங்களுடைய தெளிவான சிந்தனை இன்று தோன்றும். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து ஈடுபட்டு அதில் வெற்றி காண்பீர்கள். உங்களுடைய திறமைகள் வெளிப்படும், திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகளும் இன்று வசூலாகி மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
சுற்றுலா சென்று வருவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. கேளிக்கை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவிலே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரிய நமஸ்கார வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்