மீனம் ராசி அன்பர்களே, இன்று கடிதம் மூலம் கணிந்த செய்திகள் வந்து சேரும், நினைத்தது நிறைவேறும். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களால் உதவிகள் கிடைக்கும். வாகன பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். பொது வாழ்வில் புகழ் கூடும்.
உல்லாச பயணம் செல்ல நேரிடும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் அலைய வேண்டியிருக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும், மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் சமூகத்தில் அந்தஸ்தும், மரியாதையும் உயரும்.
மாணவச் செல்வங்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். கல்வியில் எந்தவித தடையும் இல்லாமல் உயரும். இன்று முக்கியமான பணி நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலேயே இருக்கும்.
இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்களில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் சிறப்பாகவே நடக்கும் .
அதிர்ஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் இளம் மஞ்சள்