மீனம் ராசி அன்பர்களே, இன்று எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாளாகவே இருக்கும். அயல்நாட்டிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். இடம் பூமியால் லாபம் கிடைக்கும். வாகன மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். இன்று தொழில் வியாபாரம் மந்தமான நிலையே காணப்பட்டாலும், வருமானம் வழக்கம் போல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் முழு கவனத்துடன் ஈடுபடுவது ரொம்ப நல்லது.
குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். இன்று ஆன்மீகத்தில் சிறு தொகையை செலவிட வேண்டியிருக்கும். ஆன்மீக சுற்றுலா செல்ல வேண்டி இருக்கும். இன்று மாணவர்கள் கல்விக்காக கடுமையாகத்தான் உழைக்க வேண்டியிருக்கும். ஆசிரியர்களின் சொல்படி நடந்து கொள்ளுங்கள்.
படித்த பாடத்தை எழுதிப்பாருங்கள், சக மாணவர்களிடம் கொஞ்சம் நிதானத்தை கடைபிடியுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்