மீனம் ராசி அன்பர்களே, இன்று நிதி நிலை உயர்ந்து நிம்மதி காணும் நாளாகவே இருக்கும். நினைத்தது நிறைவேறும். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி புதிய கூட்டாளிகளை சேர்க்கும் எண்ணம் உருவாகும். இன்று உங்களது பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுவது நல்லது. முன்பின் யோசிக்காமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது.
செலவுகள் கூடும். முயற்சிகள் சாதகமான பலன் இருக்கும், வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கும். சக ஊழியர்களிடம் கவனமாகப் பேசுவது ரொம்ப நல்லது. இன்று பொறுமையை கையாளுங்கள், முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள். தியானம் போன்றவைகளில் ஈடுபடுங்கள், மனநிம்மதி ஆகவே இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள்.
படித்த பாடத்தை தயவுசெய்து எழுதிப் பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பிறகு மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்