Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! எச்சரிக்கை தேவை….! தொல்லை ஏற்படும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

இன்றைய நாள் குடும்பத்தினரின் ஆலோசனையை ஏற்றுக் கொள்ளுங்கள். சில நண்பர்களால் உங்களுக்கு தொல்லைகள் இருக்கும். அதனால் மனக்கஷ்டங்கள் ஏற்படும். வீட்டுச் செலவுக்காக பணத்தேவை அதிகரிக்கும். அதை சிக்கனமாக செலவு செய்து கொள்ளுங்கள். பாம்பு போன்ற விஷ பிராணிகளிடம் எச்சரிக்கையுடன் இருங்கள். பிராணிகள் என்பது வீட்டில் வளர்க்கும் பிராணிகளாக கூட இருக்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைத்தாலும் அதில்  கடுமையான பணிச்சுமை இருக்கும். உடன்பிறப்புகளுடன் ஒற்றுமையை வளர்க்க வேண்டும். அவர்களிடம் அந்தஸ்தை பார்க்க வேண்டாம். பண வரவு அதிகமாகும். வியாபாரம் சற்று மந்தமாக நடந்தாலும் பண வரவுக்கு குறைவிருக்காது.

வெளியூர் பயணத் திட்டத்தில் சில மாற்றங்கள் இருக்கும். ஆனால் பயணங்கள் மேற்கொள்ள வேண்டாம். யாரைப் பற்றியும் தவறான விமர்சனங்கள் வேண்டாம். இன்று காதலில் உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு சின்ன சின்ன விஷயங்களில் கோபத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிடும். இன்று மாணவர்கள் துணிச்சலுடன் காரியங்களை செய்யக் கூடும். கல்வி மீது அக்கறை ஏற்படும். படிப்பில் உங்களால் வெற்றி பெற முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பிரவுன் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிரவுன் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் நீங்கள் செய்யுங்கள் வெற்றி நிச்சயம்.

அதிர்ஷ்டமான திசை: தென்கிழக்கு                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   2 மற்றும் 9                                                                                                              அதிர்ஷ்டமான நிறம்: பிரவுன் மற்றும் மெரூன்

Categories

Tech |