Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! நிதானம் தேவை….! தடுமாற்றம் ஏற்படும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! தன்னிசையான முடிவுகள் எடுக்க வேண்டாம்.

இன்று செய்கின்ற செயலில் குழப்பம் காரணமாக தடுமாற்றம் ஏற்படும். நிதானத்துடனும்  அக்கறையுடனும் செயல்படுவது மிகவும் அவசியம். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். முக்கியமான முடிவுகள் எடுக்கும் போது குடும்பத்தாரிடமும் கலந்து ஆலோசித்து எடுக்க வேண்டும். தன்னிச்சையான முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானது. உறவினர் வகையில் அதிகப்படியான செலவுகள் உண்டு. கடன் கொடுத்தவர்கள் உங்களுக்கு தொல்லை கொடுபார்கள். ஆனால் பெரிய அளவில் பிரச்சினை ஏற்படாது. குடும்பத்தைப் பொறுத்தவரை மகிழ்க்கும் உற்சாகத்திற்கு குறைவில்லை. கணவன் மனைவிக்கு இடையே உள்ள பிரச்சனைகள் சரியாகிவிடும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் மட்டும்தான் இருக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்துவந்த பின்தங்கிய நிலை மாறும்.

படிப்படியாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய முடியும். அதேபோல் காதல் சில நேரங்களில் மன வருத்தத்தை கொடுக்கும். இந்த காதல் நமக்கு தேவைதானா என்ற எண்ணத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். கோபங்கள் அதிகமானால் சில இழப்புகள் நேரிடும். தொலைந்து போன பொருட்கள் கையில் வந்து சேரும். திருமணமாகாதவர்களுக்கு கண்டிப்பாக நல்ல வரன்கள் கூடிவரும். மாணவர்கள் படிப்பில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். இன்றைய பணியை மேற்கொள்ளும் போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தித் தரும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து பாருங்கள் கண்டிப்பாக உங்களது வாழ்க்கையில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டு விடும். இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண் 3 மற்றும் 5. அதிர்ஷ்ட நிறம் பிங்க் மற்றும் ஆரஞ்சு.

Categories

Tech |