மீனம் ராசி அன்பர்களே.! எதிர்பார்த்த காரியங்கள் சிறப்பாக நடக்கும்.
இன்று அரசாங்க வழியில் எதிர்பார்த்த காரியங்கள் சிறப்பாக நடக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் காரியத்தில் அனுகூலமும் இருக்கும். எதிர்பார்த்தபடி பழைய பாக்கிகள் கூட வசூல் செய்து விடுவீர்கள். கடன் பிரச்சினைகளில் ஓரளவு அடைபடும். நிதி நிலைமை சீர்படும். உற்சாகமாக காணப்படுவீர்கள். வீண் செலவுகளை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். எந்த ஒரு வேலையையும் செய்யும் முன் அதில் உள்ள நல்லது கெட்டதுகளை ஆராய வேண்டும். பின்னர்தான் முடிவுகள் எடுக்க வேண்டும். எதிரிகளால் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து விடும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். வாடிக்கையாளரை தக்க வைத்துக் கொள்வீர்கள். எதிரிகளின் தொல்லை எதுவும் இல்லாததால் சந்தோஷம் இருக்கும்.
கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சினைகள் கண்டிப்பாகக் குறைந்துவிடும். குடும்பத்தைப் பொறுத்தவரை சின்ன சின்ன சிக்கல்கள் ஏற்பட்டாலும் மனம் சந்தோஷமாக காணப்படும். காதல் சின்ன சின்ன பிரச்சனையை ஏற்படுத்தும். பொறுமையாக செல்லவேண்டும். மாணவர்கள் முடிவுகளில் தெளிவு வேண்டும். பெற்றோர்களை மதித்து அவர்களின் சொல்லை கேட்டு நடக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது அடர் சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். அடர் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: அடர் சிவப்பு மற்றும் இளம் மஞ்சள்