மீனம் ராசி அன்பர்களே.! மனதை நிதானமாக வைத்துக் கொள்ளவேண்டும்.
இன்று தொழில் புரிவோருக்கு வீண் செலவுகள் தவிர்க்க முடியாததாக இருக்கும். நேர்வழியில் பணத்தை செலவு செய்தால் மனம் நிம்மதியாக இருக்கும். சில கெட்ட சகவாசத்தை நீங்கள் விட்டுவிட வேண்டும். மனதில் இனம் புரியாத கவலை இருக்கும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் தினம் இருப்பதினால் சில காரியங்களில் எச்சரிக்கையுடன் ஈடுபடவேண்டும். செலவுகளை குறைத்துக்கொண்டால் சிக்கனம் பிரச்சினைகள் தீர்ந்துவிடும். குடும்பத்தை நீங்கள் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். குடும்பத்திற்கு என்ன வேண்டுமோ அதனை செய்து கொடுக்க வேண்டும். சோம்பேறித்தனம் இருக்கும். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். யாரை பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். அனைவரையும் அனுசரித்து செல்ல வேண்டும். கணவன் மனைவி இருவரும் குடும்ப ஒற்றுமைக்காக பாடுபடவேண்டும்.
மனதை நிதானமாக வைத்துக் கொள்ளவேண்டும். பிள்ளைகளிடம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். காதல் விவகாரங்களில் மனதை பாதிக்கும். காதலில் பிரச்சனை ஏற்படும். காதலில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். தேவை இருப்பின் மட்டுமே பேச்சை அதிகப்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த ஒரு காரியத்திலும் ஈடுபட வேண்டாம். கல்வி பற்றிய சிந்தனை மட்டுமே இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விநாயகர் சதுர்த்தி என்பதினால் விநாயகரை வழிபட்டு உங்களுடைய கஷ்டங்களை சொல்லி 3 நிமிடங்கள் தியானத்தில் இருந்து விநாயகரை வழிபடவேண்டும். எல்லாவிதமான நன்மையையும் உங்களுக்கு ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளம் பச்சை