மீனம் ராசி அன்பர்களே.! வார்த்தைகளில் கவனம் தேவை.
இன்றைய நாளில் நினைத்தது நிறைவேறும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெற முடியும். தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். இழுபறியாக இருந்த காரியம் இனிதே முடிவடையும். தொழில் நிமித்தமாக நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். பஞ்சாயத்துகளில் வெற்றி கிடைக்கும். பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். செல்வம், உரிமை, அதிகாரம் போன்ற அனைத்து விஷயங்களும் கிடைக்கும். செல்வம் தவறான வழியில் விரயம் ஆவதற்கு வழி உண்டு. நிதி நிலைமையை நீங்கள் சரி செய்து கொள்ள வேண்டும்.
குடும்பத்திற்கு உங்களால் என்ன முடியுமோ அதனை செய்து கொடுப்பீர்கள். அன்பிற்கு சொந்தக்காரர் ஆவீர்கள். காதலில் உள்ளவர்கள் மிகவும் தைரியமாக காணப்படுவார்கள். என்னால் எல்லாம் முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். காதல் கைகூடி விடும். புண்படும்படி வார்த்தைகளை வெளியிட வேண்டாம். மாணவர்கள் பெற்றோர்களை மதிக்காமல் கோபத்துடன் பேசக்கூடும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே என்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள்