Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! பணவரவு இருக்கும்….! மனத்துணிவு ஏற்படும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

இன்று உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் உங்கள் மீது அன்பு பாராட்டக் கூடும். எதிர்பார்த்த உதவிகள் கண்டிப்பாக கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். புதிய முயற்சிகளை தள்ளிப் போட்டுக் கொள்ளுங்கள். பெரிய தொகையை இப்போதைக்கு பயன்படுத்த வேண்டாம். வீண் அலைச்சலை குறைத்துக் கொள்ள வேண்டும். காரிய தாமதம் இருக்கும். அதனை சரி செய்து கொள்ள வேண்டும். உத்யோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களுடன் மனக்கசப்பு உண்டாகலாம். அலுவலகத்தில் அதிகப்படியான சுமை இருக்கும். பொறுமையாக செயல்பட வேண்டும். புதிய வாகனம் வாங்க கூடிய யோகம் இருக்கும்.

கணவன் மனைவிக்கு இடையே சுமூகமான உறவு ஏற்பட விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். மனத்துணிவு இருக்கும். இல்லத்தில் கலகலப்பான சூழல் இருக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். இன்று காதலில் உள்ளவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் தெளிவாக பேசிக் கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பாராத திருப்பம் உண்டாகும். கல்வியில் வெற்றி கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பின்பு நிறம் உங்கள் அதிஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் சிறப்பாக செய்யுங்கள் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் காத்திருக்கின்றது.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                      அதிர்ஷ்டமான எண்:   7 மற்றும் 9                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் மற்றும் ஆரஞ்சு

Categories

Tech |