Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! அலட்சியம் வேண்டாம்….! எதிரிகளின் தொல்லை இல்லை….!!

மீனம் ராசி அன்பர்களே.! கவனச் சிதறல்களை தவிர்க்க வேண்டும்.

இன்று இல்லத்திலும் உள்ளத்திலும் அமைதி கூடும். எப்படிப்பட்ட பிரச்சனைகள் வந்தாலும் அதனை உங்களால் சமாளிக்க முடியும். அனைவரும் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். சுபகாரிய பேச்சுகள் இல்லத்தில் நடைபெறும். சொந்த பந்தங்களின் வருகை உண்டாகும். எதிரிகளின் தொல்லை இருக்காது. மனம் நிம்மதியாக இருக்கும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சில காரியங்களை முன்பின் யோசிக்காமல் பேசி விடுவீர்கள். அதனை சரி செய்து கொள்ள வேண்டும். கவனச் சிதறல்களை தவிர்க்க வேண்டும். அலட்சியமான போக்கை விட்டுவிட வேண்டும். உறவினர்களால் கூடுதல் செலவு இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பேச்சுக்களில் மிகவும் நிதானமாக நடந்து கொள்ளவேண்டும். வாடிக்கையாளரிடம் பேசும் போது நிதானம் தேவை. பங்குதாரர்களுடன் பேசும்போது கவனமாக பேச வேண்டும்.

எதிர்பார்த்த பணம் தாமதமாக வந்து சேரும். மேன்மையான எண்ணங்கள் பிரதிபலிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். சமூகத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே உள்ள பிரச்சனைகள் பெரிய அளவில் வருத்தத்தை கொடுத்திருக்கும். அதற்கான முடிவுகள் வந்துவிட்டது. காதல் கைகூடும். காதலில் இன்பம் பொங்கும். காதல் மனதிற்கு பிடித்தவரை கரம் பிடிக்க வைக்கும். தைரியமாக இருக்கலாம். மாணவர்கள் எதையும் தைரியமாக செய்வீர்கள். கல்வியில் திறம்பட வருவீர்கள். மேற்கல்விக்கான முயற்சியில் முன்னேற்றம் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   1 மற்றும் 3                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் 

Categories

Tech |