Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! சுறுசுறுப்பாக இருப்பீர்கள்….! முன்னேற்றம் இருக்கும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! பணவரவு கண்டிப்பாக இருக்கும்.

இன்றைய நாள் கலகலப்புக்கு பஞ்சம் இல்லை. சுறுசுறுப்பிற்கு எந்த ஒரு குறையும் இல்லை. எதிர்ப்புகள் எல்லாம் விலகிச்செல்லும். எதிரிகள் எல்லாம் தவிடுபொடியாவார்கள். லாபம் உங்களுக்கு எதிர்பார்த்தபடி வந்து சேரும். முன்னேற்றம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். சிக்கனத்தைக் கடைப்பிடித்து வாழ்க்கையில் இனிமையாக நீங்கள் பயணங்களை மேற்கொள்வீர்கள். மாற்றம் ஏற்படக்கூடும். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் ஏற்படும். திருமணமாகாதவர்களுக்கு திருமண தடைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது கவனம் வேண்டும். தேவையில்லாத வீண் பழிகளை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டாம். பார்த்து பக்குவமாக செய்ய வேண்டும். காரிய வெற்றி கண்டிப்பாக இருக்கும். பணவரவு கண்டிப்பாக இருக்கும்.

இன்று கலைத்துறையில் உள்ளவர்களுக்கு கண்டிப்பாக வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் வரக்கூடும். வெளிநாட்டு தொடர்புடைய விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காத்திருக்கின்றது. கடன் பிரச்சினைகள் தீர்ந்து விடும். காதலின் நிலை சந்தோஷத்தை ஏற்படுத்தி தரும். மாணவர்கள் எதையும் யோசித்து பேச வேண்டும். கல்வியில் முடிவெடுக்கும்போது பெற்றோர்களை கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். ஆசிரியர்களிடம் அன்பை வெளிப்படுத்த வேண்டும். மாணவர்களிடம் அன்பை வெளிப்படுத்த வேண்டும். இன்று முக்கியமான பணியினை மேற்கொள்ளும் போது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு                                                                                                        அதிர்ஷ்டமான எண்:   6 மற்றும் 9                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: இளம் பச்சை மற்றும் நீலம்

Categories

Tech |