மீனம் ராசி அன்பர்களே.! பண வரவு அதிகமாக இருக்கும்.
இன்று தனவரவு உங்களுக்கு தாராளமாக இருக்கும். கையில் காசு பணம் அதிகமாக புரளும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். செய்யக்கூடிய வேலை திருப்திகரமாக இருக்கும். தொழில் சம்பந்தமாக நண்பர்கள் உதவி புரிவார்கள். இன்று வெளியிடத்தில் வி.ஐ.பி-களின் சந்திப்பு கிடைக்கும். நீங்கள் நினைத்ததை சிறப்பாக உங்களால் செய்து முடிக்க முடியும். பெண்கள் எந்த ஒரு முயற்சியில் ஈடுபட்டாலும் முன்னேற்றம் இருக்கும். உங்களுடைய போராட்டமான வாழ்க்கைக்கு இப்பொழுது முற்றுப்புள்ளி வைக்க முடியும். கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன பிரச்சனைகள் ஓடிக்கொண்டிருக்கும். மனம்விட்டு பேச வேண்டும். அனைவரையும் அனுசரித்து செல்லுங்கள். பிள்ளைகளிடம் கோபம் காட்ட வேண்டாம்.
துணிச்சல் அதிகரிப்பதனால் செய்யக்கூடிய வேலையில் வேகம் இருக்கும். வேகத்துடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். பிறரிடம் வாக்குவாதம் இல்லாமல் நடந்து கொள்ளுங்கள். காதல் கொஞ்சம் சிரமத்தை ஏற்படுத்தும். இந்த காதல் நமக்கு தேவைதானா என்ற எண்ணத்தை உருவாக்கி கொடுக்கும். மாணவர்களுக்கு கண்டிப்பாக கல்வியில் முன்னேற்றம் காத்திருக்கின்றது. கல்வியிலிருந்த தடை விலகி செல்லும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பிரவுன் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ப்ரவுன் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்களது வாழ்வில் முன்னேற்றம் காத்திருக்கின்றது.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: பிரவுன் மற்றும் வெள்ளை