மீனம் ராசி அன்பர்களே.! சொத்துப் பிரச்சினை சுமூக முடிவை கொடுக்கும்.
இன்றைய நாளில் உங்கள் எண்ணங்கள் எல்லாம் எளிதில் நிறைவேறும். கடுமையான உழைப்புக்கு நல்ல பலன் உண்டு. சொத்துப் பிரச்சினை சுமூக முடிவை கொடுக்கும். முன்னோர்கள் சொத்துக்கள் உங்கள் கையில் வந்து சேர வாய்ப்புண்டு. குடும்ப தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். எதையும் செய்யக்கூடிய ஆற்றல் வெளிப்படுகின்றது. உத்தியோகத்தில் உங்களுக்கு நல்ல பெயர் அமைய வாய்ப்பு உண்டு. அதிகாரிகளிடம் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். தானம் செய்யக்கூடிய எண்ணம் அதிகரிக்கும். அனைவரும் உங்களை சரியாக புரிந்து கொள்வார்கள். உங்களுக்காக அவர்கள் உதவியும் செய்து கொடுப்பார்கள். உங்களுடைய நல்ல எண்ணத்திற்கு எப்போதும் நல்லதே நடக்கும். கடன் பிரச்சனை நினைத்து தயவுசெய்து மனவருத்தங்கள் கொள்ள வேண்டாம். பயணத்தின்போது கொஞ்சம் புதிய அனுபவங்களை கற்றுக் கொள்வீர்கள்.
வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் அதனால் பாதிப்புகள் ஏதும் இல்லை. பொது நலக் காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்பத்தை பொறுத்தவரை சகோதர சகோதரிகள் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். யாரேனும் உங்களை கோபப்படுத்த கூடும் பொறுமையாக இருப்பது நல்லது. காதலில் உள்ளவர்களுக்கு பிரச்சனைகள் இருக்காது. பிரச்சினைகள் இருந்தால் கூட சரியாகிவிடும். மனமகிழ்ச்சி ஏற்படக்கூடிய சூழல் இருக்கின்றது. மாணவர்களுக்கு கல்வியின் மீது அக்கறை ஏற்படும். குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியமும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 8 அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் மற்றும் ஆரஞ்சு