மீனம் ராசி அன்பர்களே.! எதையும் யோசித்து செய்ய வேண்டும்.
இன்று ஆராய்ச்சி தொடர்புடைய விஷயங்களில் நாட்டம் செல்லும். ஆனால் என்ன செய்வது ஏது செய்வது என்ற மன குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். சிந்தனையை ஒருமைபடுத்த வேண்டும். சந்திராஷ்டமம் முடிந்த பிறகு எந்த முடிவையும் எடுத்துக்கொள்ளலாம். மனதிற்குள் தைரியத்தை வரவழைத்துக் கொள்ள வேண்டும். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். ஒருமுறைக்கு இருமுறை யோசித்து பேசவேண்டும். வேகமும் விவேகமும் வேண்டும். தொழில் வியாபாரத்தில் சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக தான் இருக்கும். சிக்கனத்தைக் கடைப்பிடித்தால் சேமிப்பு உயரும். யாருக்கும் உத்தரவாதம் கொடுக்க வேண்டாம். வாக்குறுதி கொடுக்க வேண்டாம். எதையும் யோசித்து செய்ய வேண்டும்.
காரிய தடைகள் ஏற்பட்டாலும் சரியாகிவிடும். தடைகள் நீங்கி முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத செலவுகள் இருக்கும். செலவை கட்டுப்படுத்த வேண்டும். காதலில் உள்ளவர்களுக்கு குழப்பங்கள் அதிகரிக்கும். காதலின் நிலைப்பாடுகள் மனதிற்குள் குழப்பத்தை உண்டாக்கும். மாணவர்கள் பொறுப்பாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு கல்வியை தவிர வேறு எதிலும் கவனம் செலுத்த வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதினால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு அதிர்ஷ்டமான எண்: 7 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் நீலம்