மீனம் ராசி அன்பர்களே.! குடும்பத்தில் இதமான சூழ்நிலை ஏற்படும்.
இன்று மனதில் இருந்த கவலை நீங்கிவிடும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் பணி புரியவேண்டும். பணவரவில் திருப்திகரமான நிலை உருவாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி விடுவீர்கள். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி களைகட்டும். கலகலப்பான சூழல் இருக்கும். காலையிலேயே நல்ல செய்திகள் வரும். இறைவன் மீது அருள் ஏற்படும். காரியத்தில் வெற்றி இருக்கும். சொந்த-பந்தங்களிடம் அன்பாக பேசி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைத்து நல்ல பலனை அடைய வேண்டும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை ஏற்படும். அதிர்ஷ்டகரமான பணவரவு இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.
இருவருக்கும் அன்பு ஏற்படும். இல்லத்தில் மழலை செல்வம் கேட்பதற்கான சூழல் இருக்கும். பிள்ளைகள் உங்களுடைய கருத்துக்களை கேட்டு அதன்படி நடப்பது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். மாணவர்களுக்கு சந்தோஷம் இருக்கும். கல்வியிலும் விளையாட்டிலும் சாதிக்க முடியும். காதலில் மாற்றங்கள் இருக்கும். காதல் கண்டிப்பாக கைகூடும். நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு அதிர்ஷ்டமான எண்: 7 மற்றும் 8 அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள்