மீனம் ராசி அன்பர்களே.! எதையும் சாதிக்கும் திறமையும் அதிகமாக இருக்கும்.
இன்று உங்களுடைய செயல்களில் நிதானம் வேண்டும். செய்கின்ற செயலில் நேர்மை நிறைந்து காணப்படும். சக தொழில் சார்ந்தவர்களிடம் சச்சரவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். ரகசியங்களை கண்டிப்பாக பாதுகாக்க வேண்டும். ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்பட வேண்டும். தொழில் வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பணவரவுகளில் முன்னேற்றம் இருக்கும். எதையும் சாதிக்கும் திறமையும் அதிகமாக இருக்கும். நினைத்த காரியத்தை நினைத்தபடி உங்களால் நடத்தி முடிக்க முடியும். சில பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகி அதற்கான வெற்றியை பெற்றுக் கொள்ள முடியும். வெளிநாட்டு தொடர்புடைய விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். விவசாயத்துறையில் முன்னேற்றமும் பொருள் நல்ல முறையில் விற்று நல்ல லாபத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். தொழிலில் லாபம் இருக்கும்.
கடன் பிரச்னையை நினைத்து வருத்தப்பட வேண்டாம். திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். நல்ல வரன்களை அற்புதமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். காதலில் உள்ளவர்களுக்கு பிரச்சனையை கொடுத்தாலும் அது ஒரு சந்தோசத்தை கண்டிப்பாக கொடுக்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் காலகட்டமும் இருக்கின்றது. இன்று மாணவர்களுக்கு தைரியம் கூடும். மாணவர்கள் எதையும் சிறப்பாக செய்ய முடியும். பெற்றோர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது கருநீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். கருநீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் கருநீலம்