Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! மனக்கவலை சரியாகும்….! பொறுப்புகளை ஏற்க வேண்டும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம்.

இன்று சில காரியங்களை சரியான முறையில் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். ஒரு காரியத்தில் ஈடுபடும் போது அந்த காரியத்தில் உள்ள நல்லது கெட்டதுகளை ஆராய்ந்து பார்த்து செயல்பட வேண்டும். முயற்சிகள் தாமதமாகும். இதனால் மனதில் சஞ்சலம் ஏற்படும். தந்தையிடம் அன்பை வெளிப்படுத்த வேண்டும். தடைபட கூடிய காரியங்களை கண்டு நீங்கள் துவண்டு விடாமல் இருக்க வேண்டும். வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். குடும்ப பிரச்சனைகள் எல்லாம் வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அதனை நீங்கள் தைரியமாக சந்தித்து முடிவெடுக்க வேண்டும். தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம். சிக்கல்களை தீர்த்து வைக்கிறேன் என்று யாருக்கும் பஞ்சாயத்துகள் செய்ய வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். வாக்குறுதி கொடுக்க வேண்டாம்.

பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம். மனக்கவலை ஏற்பட்டு சரியாகும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். சில நபர்கள் உங்களுடைய கருத்துக்களை புரிந்து கொள்ளமாட்டார்கள். அதனை நினைத்து கவலைப்பட வேண்டாம். காதலில் உள்ளவர்கள் மிகவும் பக்குவமாக நடந்துகொள்ள வேண்டும். காதல் சில நேரங்களில் சலிப்பைத் தரும். தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்தும். விட்டுக் கொடுத்து சென்றால் எல்லாம் நல்லபடியாக நடக்கும். மாணவர்களுக்கு கல்வி மீது அக்கறை இருக்கும். தைரியமான முடிவுகளை எடுக்க முடியும். மாணவர்களுக்கு வெற்றி மீது வெற்றி வந்து சேரும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது ஊதா நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வந்தால் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு                                                                                                                                  அதிர்ஷ்டமான எண்:   2 மற்றும் 6                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் ஊதா

Categories

Tech |